‘கோப்ரா படம் பார்க்க போலாம் வாங்க’ : முதல்வரை அழைத்த கல்லூரி மாணவர்கள்!

Published On:

| By Selvam

விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தைக் காண கல்லூரிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வருக்கு அனுப்பிய கடிதம் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

விக்ரம் தமிழகம் மற்றும் கேரளாவில் பல பகுதிகளுக்கு சென்று படத்தின் புரோமோஷன் பணிகளில் கலந்துகொள்கிறார்.

cobra movie release

படத்தின் ட்ரெய்லர் இந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

பல திரையங்குகளில் முதல் நாள் காட்சி டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து விட்டன. இந்தநிலையில், கல்லூரியில் படிக்கும் விக்ரம் ரசிகர்கள், தங்களது கல்லூரி முதல்வருக்கு கோப்ரா திரைப்படம் பார்க்க விடுமுறை அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கின்றனர்.

cobra movie release

திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் வணிகவியல் படிக்கும் மாணவர்கள் தங்களது கல்லூரி முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கல்லூரிக்கு செப்டம்பர் 1ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் கோப்ரா திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால், செப்டம்பர் 1-ஆம் தேதி நாங்கள் கோப்ரா திரைப்படம் பார்க்க போகிறோம். எனவே, கல்லூரிக்கு வர மாட்டோம். எங்களை தொலைபேசியில் அழைக்கவோ, மெசேஜ் செய்யவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு சியான் ரசிகர்கள் என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக எங்களிடம் எக்ஸ்ட்ரா ஒரு டிக்கெட் இருக்கிறது. விருப்பமிருந்தால் நீங்களும் எங்களுடன் படம் பார்க்க வரலாம்’ என்று அழைத்துள்ளனர்.

செல்வம்

“நான் சாதாரண கணக்கு வாத்தியார்” – இருபது வேடங்களில் மிரட்டும் கோப்ரா விக்ரம்

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share