அறம் வெல்லும், கடமை தவறாது செயல்படுவோம் : கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

Published On:

| By Kavi

கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்வர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.

கிருஷ்ணர் பிறந்த தினமான ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

அந்தவகையில் இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ADVERTISEMENT

தமிழ்நாடு முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், ”அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில்
மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share