முதலமைச்சர் அலுவலகத்தை அமைக்கும் பணியை மேற்கொள்ள சென்னையைச் சேர்ந்த ராசி பில்டர்ஸ் நிறுவனம் குறைந்த தொகையை குறிப்பிட்டு L1 நிறுவனமாக தேர்வாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் பத்தாவது மாடியில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
வங்கக் கடலை பார்த்தவாறு அமைக்கப்படும் முதலமைச்சரின் இந்த அலுவலகத்தை அதிநவீன முறையில் புதுப்பிக்கும் பணிகளுக்கான டெண்டரை பொதுப்பணித்துறை கோரி இருந்தது.
இதற்கு 5.54 கோடி ரூபாய் திட்ட செலவாக மதிப்பிடப்பட்டிருந்தது.



இந்நிலையில் இந்த டெண்டரில் பங்கேற்ற ஒப்பந்த நிறுவனங்களில் சென்னையைச் சேர்ந்த ராசி பில்டர்ஸ் நிறுவனம் அரசின் மதிப்பீட்டு தொகையை விட 32 சதவிகிதம் குறைவாக கேட்டு மிகக் குறைந்த தொகையை கேட்ட ஒப்பந்ததாரராக (L1) தேர்வாகியுள்ளது.
இந்த டெண்டரில் ஈஸ்வரி கன்ஸ்ட்ரக்ஷன், எம் கியூப் இன்ஃப்ரா மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
