தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சிஜேபி : குண்டுகட்டாக கைது!

Published On:

| By Kavi

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள ஞானேஷ் குமார், சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்தின் போது எடுத்த சில முடிவுகளுக்கு மற்ற தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி இருவரும் 14 முறை ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

எனினும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்த சூழலில் காக்ரோச் ஜனதா கட்சியினர், ’24 மணி நேரத்தில் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும்’ என்று எச்சரித்திருந்தனர்.

ADVERTISEMENT

அதன்படி இன்று, டெல்லியிலும் மும்பையிலும் காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களுடன் ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும், அகில இந்திய மாணவர் சங்கம், எஸ்எஃப்ஐ, தேசிய சமூக பணி கழகம் மற்றும் பிற மாணவ அமைப்பினர், ‘வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் வாக்காளர்கள் நீக்கத்தை கண்டித்தும், ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

அப்போது, ’தேர்தல் ஆணையத்தால் தான் பிரதமர் மோடியின் கடை ஓடுகிறது’ என்று காக்ரோச் ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசிதோஷ் ரங்கா கடுமையாக விமர்சித்தார். 

மேலும் அவர் கூறுகையில், ”நான் மும்பையில் ஒரு வாடகை கார் ஓட்டுனரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது குடும்பம் மூன்று தலைமுறைகளாக இந்த நகரத்தில் வசித்து வந்த போதும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு விட்டதாக கூறினார்” என்று தெரிவித்தார். 

சிஜேபி-யை சமூக வலைதளங்களில் உருவாக்கிய அபிஜித் தீப்கே கூறுகையில், இந்த அரசாங்கம் மிகவும் திறமையற்றதாக இருக்கிறது. இதனால் இன்னும் இரண்டு மாதங்களில் நாங்கள் மீண்டும் தீவிர போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது” என்று கூறினார். 

இந்த நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் அதிஷி உட்பட 700க்கும் மேற்பட்டோர்களை போலீசார் கைது செய்தனர். 

குறிப்பாக இளைஞர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்ததால் பரபரப்பு நிலவியது. 

இதுபோன்று மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த போதிலும் காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share