மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ : டிராக்டர் ஓட்டி, டீக்கடையில் உரையாடி வாக்கு சேகரிப்பு! – வீடியோ

Published On:

| By Kavi

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் இன்று (அக்டோபர் 2) ரோடு ஷோ மேற்கொண்டார்.

மதுராந்தகத்தில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார்.

ADVERTISEMENT

ஏற்கனவே முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் மீண்டும் இன்று ரோடு ஷோ நடத்தினார்.

அப்போது வழிநெடுகிலும் முதல்வர் விஜய்க்கு பொதுமக்களும், ரசிகர்களும் பரிசுகளை வழங்கினர்.

ADVERTISEMENT

மாமண்டூர் பகுதியில் ரோடுஷோ மேற்கொண்ட போது, அவருக்கு முருகர்சிலை வழங்க முயன்றனர். ஆனால் கூட்ட நெரிசலில் சிலை கீழே விழுந்தது. எனினும் வாகனத்தை நிறுத்தி அதை பெற்றுக்கொண்டார்.

பின்னர் கப்பு முக்கிய பிகிலு என்ற வகையில் கோப்பை ஒன்றை வழங்கினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர் முதல்வர் விஜய்க்கு மாலை அணிவிப்பது போன்ற போட்டோ ப்ரேம் ஆகியவை வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இன்று முதல்வர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கிய முதல் படமான சிக்மா வெளியாகியிருக்கும் நிலையில், ”தந்தையும் மகனும்” இருப்பது போன்று சிக்மா என குறிப்பிட்டு ஒரு போட்டோ ப்ரேமை வழங்கினர். இதை பார்த்து மகிழ்ச்சியடைந்த முதல்வர் விஜய், அந்த ப்ரேமை தூக்கி காட்டியவாறு ரோடு ஷோ சென்றார்.

பின்னர் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து மதுராந்தகம் ஊருக்குள் சென்ற முதல்வர் விஜய், அகிருந்த டீக்கடையில் அமர்ந்து ஊர் பெரியவர்களுடன் கலந்துரையாடி டீ அருந்தினார். அங்கிருந்து விவசாய நிலங்களுக்கு பார்வையிட சென்ற அவர், டிராக்டரில் நஞ்சை உழவு ஓட்டி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்தார்.

🔴LIVE :மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நேரலை | By Election | TVK | Tamilnadu
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share