கிச்சன் கீர்த்தனா : சாக்லேட் சேமியா

Published On:

| By christopher

Chocolate Semiya Payasam recipe

குடியரசு தினமான இன்று, வீட்டிலுள்ளவர்களை அசத்த இந்த சாக்லேட் சேமியா உதவும். உப்புமாவுக்காகவும் பாயசத்துக்காகவும் தான் சேமியா என்று நினைந்திருந்தவர்கள், சேமியாவில் இப்படி ஓர் உணவா அன்று அசந்துபோவார்கள்.

என்ன தேவை?

ADVERTISEMENT

பால் – 800 மில்லி
சாக்லேட் – 75 கிராம்
சேமியா – 50 கிராம்
பொடித்த சர்க்கரை – 75 கிராம்
வெனிலா எசென்ஸ் – 3 சொட்டு

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

மொத்தம் உள்ள பாலில், முக்கால் பங்கு பாலைக் காய்ச்சவும். அதில் சேமியாவைப் போட்டு வேகவிடவும். மீதி பாலில், ‘சாக்லேட்’டைத் துருவி அதனுடன் சேர்த்து நன்கு சூடாக்கவும். மிதமான தீயில் வைத்து சூடாக்கும்போது சாக்லேட் சீராக உருகும். மொத்தமும் உருகி நன்கு கலந்ததும் வேகவைத்த சேமியா பால் கலவையுடன் சேர்த்து அத்துடன் பொடித்த சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்க, சாக்லேட் சேமியா தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா : சேமியா பகளாபாத்

கிச்சன் கீர்த்தனா : மட்டன் சேமியா பிரியாணி

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share