தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஓர் உணவு சேமியா பகளாபாத். இதைச் செய்ய 10 நிமிடங்களே போதுமானதுதான் என்றாலும் இதைச் சாப்பிட்டவர்கள் நாள் முழுக்க இதன் சுவையைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள்.
என்ன தேவை?
சேமியா – ஒரு கப்
தயிர் (புளிக்காதது) – முக்கால் கப்
பால் – அரை கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு, சூடானதும் வறுத்த சேமியாவைப் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு, தண்ணீரை நன்கு வடிகட்டி, ஆறவிடவும். ஆறியதும் தயிர், உப்பு சேர்த்துக் கிளறவும். கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் சேர்த்துக் கலக்கவும். பிறகு பாலை தளர சேர்க்கவும். நிறைவாக கொத்தமல்லி சேர்க்கவும். கூடுதல் சுவைக்காக திராட்சை, மாதுளை முத்துகள், ஆப்பிள் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்னி அட்ராசிட்டீஸ்: கிளாம்பாக்கம் – தாம்பரம் செல்ல பாயின்ட் டூ பாயின்ட் பஸ்கள்!
டிஜிட்டல் திண்ணை: கலகலத்த இந்தியா கூட்டணி…களமிறங்கும் ஸ்டாலின்