முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

Published On:

| By Mathi

CM Stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவக் கூட்டம் இன்று ஜனவரி 6-ந் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 20-ந் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி அமைச்சரவைக் கூட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதில், சட்டப்பேரவையில் ஆளுநர் வாசிக்கும் உரையில் இடம் பெறக் கூடிய அம்சங்கள், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறுதல், தூய்மை பணியாளர்கள்- இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share