போக்சோ வழக்கு: சிறுமியின் புகைப்படம் வெளியிட தடை – சென்னை காவல்துறை

Published On:

| By Pandeeswari Gurusamy

போக்சோ வழக்கில் சிறுமி ஒருவரின் புகைப்படம் மற்றும் காணொளி பகிரப்படுவது சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்ள பதிவில், “போக்சோ வழக்கு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

ADVERTISEMENT

சென்னை பெருநகர காவல்துறை, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை விசாரித்து வருகிறது. இதில், சிறுமி ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவரின் இத்தகைய புகைப்படங்களைப் பகிர்வது ஒரு குற்றமாகும். அத்தகைய புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ (POCSO) சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை பெருநகர சென்னை காவல்துறையிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share