சென்னையிலேயே டீச்சர் வேலை… அதுவும் ஏர் ஃபோர்ஸ் ஸ்கூல்ல! மிஸ் பண்ணிடாதீங்க… அப்ளை பண்ண இதுதான் லாஸ்ட் டேட்!

Published On:

| By Santhosh Raj Saravanan

chennai avadi air force school recruitment 2026 teacher jobs

“டீச்சர் வேலைக்கு ட்ரை பண்றீங்களா? அதுவும் நம்ம சென்னையிலேயே ஒரு மத்திய அரசுப் பள்ளி வேலை கிடைச்சா எப்படி இருக்கும்?” ஆவடி விமானப்படைப் பள்ளியில் (Air Force School Avadi) காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தற்போது ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026-27 கல்வி ஆண்டிற்கான இந்தத் தேர்வில், நிரந்தரப் பணியிடங்கள் மட்டுமின்றி ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளும் உள்ளன.

என்னென்ன வேலைகள் காலியாக உள்ளன?

ADVERTISEMENT

ஆவடி ஏர் ஃபோர்ஸ் ஸ்கூலில் பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்:

ஆசிரியர் பணியிடங்கள்:

ADVERTISEMENT
  • பிஜிடி (PGT) – முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (Physics, History, Geography, Political Science).
  • டிஜிடி (TGT) – பட்டதாரி ஆசிரியர் (Maths, Science, Hindi, Drawing).
  • பிஆர்டி (PRT) – இடைநிலை ஆசிரியர்.
  • என்டிடி (NTT) – நர்சரி பயிற்சி பெற்ற ஆசிரியர்.

பிற பணியிடங்கள்:

  • ஹெல்பர் (Helpers) – ஆயா (Ayah) மற்றும் வாட்ச்மேன் (Watchman).
  • ஆய்வக உதவியாளர் (Lab Attendant).

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ADVERTISEMENT
  • வயது வரம்பு: ஆசிரியர் பணியிடங்களுக்கு 21 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு (அதிகபட்சம் 55 வரை).
  • கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் டிகிரி/மாஸ்டர் டிகிரி உடன் பி.எட் (B.Ed) முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அவசியம்.
  • ஹெல்பர் வேலைக்கு: இதற்குப் பெரிய படிப்பு தேவையில்லை. எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலே போதுமானது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • விண்ணப்பப் படிவம்: https://afschoolavadi.com/Carrier.html என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் டவுன்லோட் செய்யுங்கள்.
  • பூர்த்தி செய்யுங்கள்: விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, அத்துடன் உங்கள் கல்விச் சான்றிதழ் நகல்கள், ஆதார், போட்டோ போன்றவற்றை இணைக்கவும்.
  • அனுப்ப வேண்டிய முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பள்ளியில் சமர்ப்பிக்கலாம்.
  • முகவரி: The Principal, Air Force School, Avadi, Chennai – 600 055.
  • கடைசி நாள்: உங்கள் விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 19, 2026.

தேர்வு முறை:

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள். வகுப்பறையில் பாடம் நடத்திக் காட்டும் (Teaching Demo) முறையும் இருக்கும்.

ஏர் ஃபோர்ஸ் ஸ்கூல் வேலைனா சும்மாவா? சம்பளம், மரியாதை எல்லாமே டாப் கிளாஸ்!

  • சரியான டாக்குமெண்ட்ஸ்: விண்ணப்பத்துடன் அனுப்பும் ஜெராக்ஸ் காப்பிகள் தெளிவாக இருக்கட்டும். அரைகுறையாக அனுப்பினால் ரிஜெக்ட் ஆகிவிடும்.
  • இங்கிலீஷ் முக்கியம்: இது மத்திய அரசுப் பள்ளி என்பதால், ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் தெரிந்திருப்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட்.
  • நேரில் கொடுப்பது பெஸ்ட்: ஆவடி பக்கம் இருப்பவர்கள் தபாலை நம்பாமல், நேராகச் சென்று ஆபீஸில் கொடுப்பது பாதுகாப்பானது.

ஜனவரி 19ஆம் தேதிக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. இன்னைக்கே அப்ளிகேஷனை ரெடி பண்ணுங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share