நீர் என்பது மோதலுக்கானதல்ல… முதல்வர் விஜய்யுடனான ஆலோசனைக்கு பின் சந்திரபாபு நாயுடு பதிவு!

Published On:

| By Kavi

தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று (அக்டோபர் 13) ஆந்திர மாநிலத்துக்கு சென்றார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாகக் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

ADVERTISEMENT

அப்போது முதல்வர் விஜய், தெலுங்கு கங்கை திட்டம் மூலம் சென்னைக்குக் கூடுதல் குடிநீர் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,  ”இந்த ஆண்டு எல் நினோ தாக்கம் காரணமாகக் கிருஷ்ணா நதி நீர் வரத்து குறைந்து கடுமையான நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும், சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஆந்திர அரசு உறுதியாக உள்ளது. ஏற்கனவே ஆந்திர அரசு சார்பில் சென்னைக்கு 4.08 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும், நீர் இருப்பு மற்றும் தேவையின் அடிப்படையில் கூடுதல் தண்ணீர் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று பதிலளித்துள்ளார். 

ADVERTISEMENT

தொடர்ந்து இந்த சந்திப்பு தொடர்பாக சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில், ”நீர் என்பது மோதலுக்கானதாக இருக்கக் கூடாது, அது ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மாநிலங்களுக்கு இடையேயான நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன், கோதாவரி – காவேரி நதிகள் இணைப்புத் திட்டமானது நீர்த் தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வை வழங்குவதுடன், விவசாயத்தை மாற்றி அமைத்து, தென்னிந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வளத்தைக் கொண்டு சேர்க்கும்”  என்று பதிவிட்டுள்ளார். 

இந்த ஆலோசனையை தொடர்ந்து முதல்வர் விஜய், விஜயவாடாவில் நடைபெற்ற ‘விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது சந்திரபாபு நாயுடு முதல்வர் விஜய்க்கு நினைவு பரிசுகளை வழங்கினார். 

ADVERTISEMENT

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய்,  ”அனைவருக்கும் வணக்கம். உங்களை அனைவரையும் சந்திப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த நவராத்திரி உற்சவத்தில் கலந்துகொள்வது என் அதிர்ஷ்டமாகப் பார்க்கிறேன். நதிகள் இணைப்பு குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் டிஸ்கஸ் செய்ய விஜயவாடாவுக்கு வந்ததற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. என் நெஞ்சில் குடியிருக்கும்… விஜயவாடா மக்கள்… உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். நன்றி” என தெலுங்கிலும், தமிழிலும் பேசினார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share