லெட்டர் எழுதினா ரூ.50,000 பரிசு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ‘குட் நியூஸ்’… மிஸ் பண்ணிடாதீங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

cbse upu international letter writing competition 2026 cash prize details

“வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம்னு டைப் பண்ணியே நம்ம பசங்களுக்குப் பேனா பிடிச்சு எழுதுற பழக்கமே போச்சு!” என்று கவலைப்படும் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சூப்பர் சான்ஸ் காத்திருக்கிறது. சும்மா ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்தால், சர்வதேச அளவில் அங்கீகாரமும், கைநிறையப் பரிசும் வெல்லும் வாய்ப்பை சிபிஎஸ்இ (CBSE) மற்றும் இந்திய அஞ்சல் துறை (India Post) இணைந்து வழங்குகின்றன.

சர்வதேச அஞ்சல் ஒன்றியம் (UPU) நடத்தும் 2026ஆம் ஆண்டிற்கான சர்வதேசக் கடிதம் எழுதும் போட்டி (International Letter Writing Competition) குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

யாரெல்லாம் கலந்துக்கலாம்?

  • வயது வரம்பு: 9 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.
  • கல்வி வாரியம்: சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமல்ல, மாநிலக் கல்வி வாரியம் உட்பட எந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

போட்டி விவரம் என்ன? உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கவே இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT
  • மொழி: ஆங்கிலம் அல்லது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு மொழியில் (தமிழ் உட்பட) கடிதம் எழுதலாம்.
  • தலைப்பு: ஒவ்வொரு ஆண்டும் ஒரு சுவாரஸ்யமான தலைப்பு வழங்கப்படும். (உதாரணத்திற்கு, “சூழலைக் காக்க ஒரு சூப்பர் ஹீரோவாகக் கடிதம் எழுதுங்கள்” என்பது போல). இந்த ஆண்டிற்கானத் தலைப்பை பள்ளிகள் மூலமாகவோ அல்லது அஞ்சல் துறை அறிவிப்பு மூலமாகவோ தெரிந்துகொள்ளலாம்.

பரிசு மழை! வெறும் சான்றிதழ் மட்டுமல்ல, வெயிட்டான பரிசுகளும் உண்டு.

  • தேசிய அளவில்: முதல் பரிசு பெறுபவருக்கு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும்.
  • சர்வதேச அளவில்: இந்தியா சார்பில் தேர்வாகும் சிறந்த கடிதம், சுவிட்சர்லாந்தில் உள்ள UPU தலைமையகத்திற்கு அனுப்பப்படும். அங்கு வெற்றி பெற்றால் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் கிடைக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி? மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் (Head Post Office) மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். பள்ளிகளே இந்தப் போட்டியை நடத்தி, சிறந்த கடிதங்களைத் தேர்வு செய்து அஞ்சல் துறைக்கு அனுப்பச் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

பரிசுப் பணம் ஒருபக்கம் இருந்தாலும், இன்டர்நேஷனல் லெவல்ல நடக்குற ஒரு போட்டியில நம்ம ஊர் பையனோ, பொண்ணோ கலந்துக்கிறது எவ்ளோ பெரிய பெருமை! உடனே உங்க ஸ்கூல் பிரின்சிபால் கிட்டயோ அல்லது கிளாஸ் டீச்சர் கிட்டயோ இதைப் பத்திக் கேளுங்க. லெட்டர் பேடை எடுங்க… எழுத ஆரம்பிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share