கோடையில் சிறுநீரக கல் பிரச்னை ஏற்பட காரணம் என்ன? தடுப்பது எப்படி?

Published On:

| By Santhosh Raj Saravanan

causes kidney stone in summer and how to prevent

கோடைக்காலத்தில் சிறுநீரக கல் (Kidney Stone) பிரச்சனை வருவதற்கு காரணம் என்ன? அதனை தடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிறுநீரகங்கள் நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். ரத்தத்தில் உள்ள கழிவுகளையும் நச்சுக்களையும் வடிகட்டி, அவற்றைச் சிறுநீர் வழியாக வெளியேற்றுவதே அவற்றின் பணியாகும். சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால், உடல் முழுவதும் பாதிக்கப்படும்.  சிறுநீரகத்தில் சிறிய பிரச்சனைகள் கூட கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். கோடைக்காலம் நிலவும் (Summer dehydration) சூழலில் தற்போது பலர் சிறுநீரகக் கல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கோடை காலத்தில் சிறுநீரகக் கல் பிரச்சனைகள் அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? இந்தப் பிரச்சனையைத் தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

ADVERTISEMENT
சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படக் காரணம்

கோடை வெப்பம் காரணமாக வியர்வை மூலம் உடல் நீரை வேகமாக இழக்கிறது. இதனால், சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுகிறது. அந்த நேரத்தில், கால்சியம் மற்றும் ஆக்சலேட் போன்ற தாதுக்கள் சிறுநீரகங்களில் சேர்ந்து கற்களாக (kidney stones causes) மாறுகின்றன. அதேபோல கோடையில் சூரிய ஒளி வைட்டமின் டி அளவை அதிகரிக்கிறது, இது கால்சியம் உறிஞ்சுதலை அதிகரித்து சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

தக்காளி, கீரை மற்றும் பீட்ரூட் போன்ற ஆக்சலேட் நிறைந்த உணவுகளும் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தக்கூடும். அதிக உப்பு மற்றும் புரத உட்கொள்ளல் சிறுநீரகக் கற்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. கோடைக்காலத்தில் பலர் தங்கள் தாகத்தைத் தணிப்பதற்காக சோடா மற்றும் குளிர்பானங்களை அருந்துகின்றனர். இவற்றில் பாஸ்பாரிக் அமிலம் (Phosphoric acid) அதிகமாக உள்ளது, இது சிறுநீரகக் கற்கள் உருவாக வழிவகுக்கும்.

ADVERTISEMENT
சிறுநீரகக் கல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கோடை காலத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உச்சி வெயில் இருக்கும் இரவு 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம். ஒருவேளை நீங்கள் வெளியே செல்ல நேர்ந்தால், ஒரு தண்ணீர் பாட்டிலை கண்டிப்பாக எடுத்துச் செல்லுங்கள். எலுமிச்சையில் சிட்ரேட் உள்ளது. இது சிறுநீரகக் கற்கள் (Kidney Stones Precautions) உருவாவதைத் தடுக்கிறது. தினமும் எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது.

அதிகப்படியான உப்பு சாப்பிடுவது சிறுநீரில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. எனவே, ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பை மட்டும் உணவில் (eat less than 5 grams salt) சேர்த்துக்கொள்ளுங்கள். தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் மாதுளை சாப்பிடுவது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கிறது. இவை சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. சோடா மற்றும் பதப்படுத்தப்பட்ட பானங்களுக்கு பதிலாக இளநீர் மற்றும் மோர் அருந்துங்கள். இவை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது. நீங்கள் வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள்களையும் சாப்பிடலாம். சாக்லேட் மற்றும் காபி போன்ற பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ADVERTISEMENT
எப்போது மருத்துவரை அணுகுவது?

உங்கள் கீழ் முதுகு அல்லது அடிவயிற்றில் கடுமையான வலி, சிறுநீரில் இரத்தம் (Blood in the urine), வாந்தி அல்லது காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக ஒரு சிறுநீரக மருத்துவரை அணுக வேண்டும். இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share