மோடியின் திடீர் அறிவிப்பு – எப்படி எதிர்கொள்வது? காங்கிரஸ் அவசர கூட்டம்!

Published On:

| By Aara

”அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி  கணக்கெடுப்பு சேர்த்து நடத்தப்படும்” என்று ஏப்ரல் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதை எவ்வாறு எதிர்கொள்வது என்று காங்கிரஸ் செயற்குழு (CWC) வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கூடவுள்ளதாக கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி டெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Caste census Modi announce congress cwc meeting

ADVERTISEMENT

சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது காங்கிரஸின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.  இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு பிகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், காங்கிரஸுக்கு நல்ல செய்தியாகவும் அதே நேரம் கெட்ட செய்தியாகவும் வந்திருக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரங்களில்.

2024 தேர்தலுக்கு முன்பு, சாதி வாரிக் கணக்கெடுப்பை, ’எதிர்க்கட்சிகளின் நகர்ப்புற நக்சல் சிந்தனையின் அடையாளம்’ என்று அழைத்தார் பிரதமர் மோடி.

ADVERTISEMENT

மிக சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத், “படேங்கே டு கட்டேங்கே” (‘பிரிந்தால் கொல்லப்படுவார்கள்’) என்பதை,  சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரிக்கைக்கான பதில் முழக்கமாக பயன்படுத்தினார். இந்துக்களை சாதி ரீதியில் பிரிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

வருகிற பிகார் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, பிகாரில் தனது கூட்டணிக் கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் சாதி வாரிக் கணக்கெடுப்பை முக்கிய அரசியல் பிரச்சாரமாக மாற்ற திட்டமிட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில்,  சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி அறிவிப்பதன் மூலம், எதிர்க்கட்சியின் சமூக நீதிப் பிரச்சாரத்தை  முன்கூட்டியே தடுத்து நிறுத்தவும், தனது சமீபத்திய தேர்தல் வெற்றிகளுக்கு முக்கியமாக இருந்த OBC வாக்குகளில் தனது பிடியைத் தக்கவைக்கவும் பாஜக  முயற்சிக்கிறது. Caste census Modi announce congress cwc meeting

இந்த பின்னணியில்தான், திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது மோடி அரசு என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் மோடியின் இந்த அறிவிப்பை தேர்தல் ரீதியாகவும்,  தேர்தலைத் தாண்டியும் எவ்வாறு எதிர்கொள்வது என்ற ஆலோசனைக்காக செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.  

Photo of author
Aara
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share