தனிநபர் 4.5 லிட்டர் மது எடுத்து வரலாமா? புதுச்சேரி விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

Published On:

| By Kavi

Pondy Liquor

புதுச்சேரியில் இருந்து மதுபானம் எடுத்து வரும் விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீடு நாளை விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

புதுச்சேரியில் மது பாட்டில்கள் விலை குறைவு என்பதால், அம்மாநிலத்தின் எல்லையில் இருக்கும் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று மது குடித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

சிலர் மது பாட்டில்களையும் வாங்கி வருகின்றனர். 

அப்படி மது பாட்டில்களை கடத்தி வருவோர் மீது கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். 

ADVERTISEMENT

இந்த நிலையில் விருதாச்சலம் அருகே காட்டு மயிலூரை சேர்ந்த வல்லரசு, 750 மில்லி லிட்டர் 2 பாட்டில், 180 மில்லி பாட்டில் என்று மொத்தம் மூன்று பாட்டில்களில் 1.680 மில்லி லிட்டர் அளவில் மதுவை எடுத்து வந்துள்ளார். 

அவரை கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி பகுதியில் சோதனையிட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து வல்லரசு மீது தமிழ்நாடு மது தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இதனை ரத்து செய்ய கேட்டு வல்லரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி, ‘தனிநபரின் சொந்த பயன்பாட்டுக்காக 4.5 லிட்டர் மதுபானம் வைத்துக்கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு 2017 அரசாணையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே மனுதாரர் சொந்த உபயோகத்துக்கு தான் அந்த மதுபானத்தை வைத்திருந்தார். அது சட்டவிரோதமானது அல்ல. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதங்களை முன் வைத்தார். 

இதை கேட்ட நீதிபதி செந்தில்குமார், 4.5 லிட்டர் மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசின் விதிகள் அனுமதிக்கும் நிலையில் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்தது ஏற்புடையதல்ல என்று கூறி வழக்கு ரத்து செய்தார். 

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ‘தனிநபர் பயன்பாட்டிற்கு 4.5 லிட்டர் விலக்கு என்பது புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது.. நீதிமன்ற உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அரசு உரிமம் பெற்ற மதுபானங்களுக்கு மட்டுமே இந்த விலக்கு பொருந்தும்’ என்ன நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். 

இதை ஏற்ற நீதிபதி செந்தில்குமார் இந்த  மேல்முறையீட்டை நாளை விசாரிப்பதாக அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share