என்.எஸ்.ஜி-யில் இந்தியா – சுவிஸ் ஆதரவு!

Published On:

| By Balaji

பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.இன்று அவர் சுவிட்சர்லாந்து பிரதமர் ஜோஹன் அம்மானைச் சந்தித்துள்ளார். சந்திப்பின்போது அணு எரிப்பொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவும் உறுப்பினர் ஆவதற்கான ஆதரவை அவர் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

அது போல, “வரி ஏய்ப்பு செய்து பணம் பதுக்குகிறவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க இந்தியாவும்,சுவிட்சர்லாந்தும் சேர்ந்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரதமர் மோடி கத்தார் சென்றிருந்தார். அங்கு அதிபர் தமிமுடன் ஏழு முக்கிய உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. சுற்றுலா, பண மோசடி, தீவிரவாதக் குழுக்களுக்கு பண விநியோகம், பொருளாதார சீர்கேடு நடவடிக்கைகள்,உள்கட்டுமான முதலீடு, கல்வி, சுகாதாரம், விளையாட்டுத்துறைகளில் முதலீடு, பண மோசடிகள் குறித்த பரஸ்பர பணபரிமாற்றம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share