ஹரியானாவில் ஹிசார் மாவட்டம் குத்துச்சண்டை கற்றுக் கொண்ட மனைவிகள் நிறைய பேர் உண்டு. அதேபோல மல்யுத்த வீராங்கனைகளும் ஏராளமானோர் நிறைந்த மாவட்டம் இது. இந்த மாவட்டத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான ஸ்வீதி பூரா முன்னாள் உலச் சாம்பியன் ஆவார். மிகச்சிறந்த கபடி வீராங்கனையும் கூட. இவருக்கும் இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் தீபக் ஹூடாவுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் திருமணம் நடந்தது.
திருமணமான இரு ஆண்டுகளிலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து, கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஸ்வீதி பூரா, ஹிஸார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணைக்கு வரும்படி தீபக் ஹூடாவை போலீசார் அழைத்திருந்தனர். அங்கு ஸ்வீதி பூராவும் அவரின் தந்தை, மாமா ஆகியோரும் ஆஜர் ஆகியிருந்தனர். இருவரிடத்திலும் எஸ்.ஐ சீமா, ஏ.எஸ்.ஐ தர்ஷன் ஆகியோர் விசாரித்துக் கொண்டிருந்தனர்.boxing champion attack husband
அப்போது, திடீரென்று ஆத்திரப்பட்ட ஸ்வீதி பூரா, போலீசார் முன்னிலையிலேயே கணவரின் காலரை பிடித்து இழுத்து அடிக்க தொடங்கினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்த மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, காவல் நிலையத்தில் போலீசார் முன்னிலையிலேயே தன்னை தாக்கியதாக சவீதா பூரா அவரின் தந்தை மற்றும் மாமா ஆகியோர் மீது தீபர் ஹூடபா ஹிசார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.boxing champion attack husband
மார்ச் 15 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.