அரசியலை விட்டு போகனும்.. ஓகேவா? ஆதவ் அர்ஜூனாவுக்கு பாஜக பகீர் சவால்!

Published On:

| By Mathi

BJP Throws Open Challenge to TVK Minister Aadhav Arjuna

தொகுதி மறுவரையறை தொடர்பான அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் கருத்துகள் பொய்; அவர் பொய் பேசியது நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலகுவாரா? என தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழக பாஜகவின் எக்ஸ் பக்கத்தின் பதிவு: அடிச்சி விடுவோம், நமக்கென்ன” என்று table செய்யப்படாத Delimitation bill-ஐ பற்றி “Fake Theories” பரப்புவது ஆரோக்கியமான அரசியல் அல்ல, ஆதவ் அர்ஜூனா அவர்களே!

ADVERTISEMENT

ஏற்கனவே இரண்டு கட்சிகளில் டோக்கன் போட்டு விட்டு மூன்றாவதாக தவெக-வில் இணைந்து, வெள்ளத்தில் அடித்து கொண்டு வந்தவன் மாளிகை வாசலை அடைந்தது போல் இன்று அமைச்சரான நீங்கள், தமிழக சட்டமன்றத்திலேயே மூத்த உறுப்பினராக திகழும் எங்கள் பாஜக-வின் சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் அவர்களை பார்த்து “உங்கள் குரல் தமிழகத்திற்கு கேட்காது” என்று பேசியது உங்கள் ஆணவத்தை மட்டுமே காட்டுகிறது.

இது ஒரு புறம் இருக்க, தொகுதி மறுவரையறை பற்றி நீங்கள் தெரிவித்த அனைத்து விஷயங்களும் பொய்யானவை! முன்னுக்குப் பின் முரணானவை என்பதற்கான சான்றுகள் இதோ:

ADVERTISEMENT
  1. அனைத்து மாநிலங்களிலும் தற்போதுள்ள பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 50% உயர்த்தப்படும் என்று நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் தெரிவித்த Formula-வின் அடிப்படையில், தமிழகத்தின் பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-இலிருந்து 59-ஆக உயரப் போகிறது.
  2. இந்த அதிகரிப்பால், விகிதாச்சார அடிப்படையில் பாராளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18% இல் இருந்து 7.23% ஆக உயரப்போகிறது. இதில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்?
  3. அடுத்ததாக, இதன் மூலம் “வடமாநிலங்கள் மட்டுமே பயனடைகின்றன” என்று கூறுகிறீர்களே, உண்மையிலேயே மத்திய பாஜகவின் அரசுக்கு அதுதான் நோக்கம் என்றால், உத்தரப் பிரதேசத்திற்கு சுமார் 140 தொகுதிகள் கிடைக்கக் கூடிய 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை நேரடியாக அமல்படுத்தியிருப்பார்கள்.
  4. ஆனால், அனைத்து மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நேர்மையான நோக்கத்தில், ‘uniform 50% increase model’-இன் மூலம் தமிழகத்திற்கு மேலும் 20 MP-க்கள் கூடுதலாக கிடைக்க வழிவகை செய்துள்ளது மத்திய பாஜக அரசு. இதனை நீங்கள் கண்மூடித்தனமாக எதிர்ப்பது உங்களின் காழ்ப்புணர்ச்சியைத் தான் காட்டுகிறது.
  5. பின்பு உங்கள் அறியாமைக்கு அமெரிக்காவை துணைக்கு இழுக்கிறீர்களே, அமெரிக்காவில் இன்னும் “வாக்குச்சீட்டு” முறை தான் பின்பற்றப்படுகிறது. அப்படியென்றால் அதையே நாமும் இங்கு பின்பற்றலாம் என நமது பாரதத்தை பல பத்தாண்டுகள் பின்னோக்கி இழுக்கிறீர்களா? EVM மூலம் வெற்றி பெற்று தான் நீங்களும் உங்கள் அரசும் இன்று அரியணையில் அமர்ந்திருக்கிறீர்கள், EVM வேண்டாம் என்றால், அதன் மூலம் பெற்ற உங்கள் வெற்றியையும் நிராகரித்து விடலாமா?

தமிழக சட்டமன்றத்தில் நின்று கொண்டு, அமெரிக்கா, அயர்லாந்து, அண்டார்டிகா என்று அடித்து விட்டால், நீங்கள் அதிமேதாவி என்றாகி விடுமா?

உங்களுக்கு அரசியல் பற்றிய புரிதலும் இல்லை, அவை நாகரிகம் குறித்த மாண்பும் தெரியவில்லை என்பதால் தான், உங்கள் கட்சியைச் சேர்ந்த சபாநாயகரே நீங்கள் பேசும் பெரும்பாலான கருத்துக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறார். இந்த லட்சணத்தில் எங்கள் பிரதிநிதி குறித்து விரல் நீட்ட உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. அதேபோல பொய்களை எல்லாம் அள்ளிவிட இது ஒன்றும் உங்கள் கட்சி மேடையல்ல, சட்டமன்றம்.

ADVERTISEMENT

எனவே, தொகுதி மறுவரையறை குறித்து நீங்கள் அடித்து விட்ட அத்தனை பொய்களும், அந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நொடியே, தூள் தூளாகி விடும்! நாங்கள் மேலே கூறியவைகள் எல்லாம் உண்மை என நிரூபிக்கப்பட்டால், தோல்வியை ஒப்புக் கொண்டு அரசியலை விட்டே வெளியேறும் திராணி இருக்கிறதா உங்களுக்கு? பகிரங்க சவால் விடுகிறோம் அமைச்சரே! முடிந்தால் பதில் கூறுங்கள். இவ்வாறு தமிழக பாஜக சவால் விட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share