“ஐடி வேலை வேண்டாம்… நம்ம படிச்ச படிப்புக்கு ஏத்த ‘கோர்’ (Core) கம்பெனி வேலை தான் வேணும்” என்று அலைபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான ஒரு சூப்பர் வாய்ப்பு.
மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில், இன்ஜினியர்களுக்கு 119 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
“இதெல்லாம் நமக்கு எங்கே கிடைக்கப் போகுது” என்று நினைக்காதீர்கள். சரியான நேரத்தில் முயற்சித்தால், மத்திய அரசு வேலை உங்கள் கையில்!
என்ன வேலை? எவ்வளவு சம்பளம்?
BEL நிறுவனத்தின் காசியாபாத் (Ghaziabad) கிளையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- பதவி: டிரெய்னி இன்ஜினியர் (Trainee Engineer-I) மற்றும் டிரெய்னி ஆபீசர் (Trainee Officer).
- காலியிடங்கள்: மொத்தம் 119. (எலக்ட்ரானிக்ஸ் – 65, மெக்கானிக்கல் – 37, கம்ப்யூட்டர் சயின்ஸ் – 6, எலக்ட்ரிக்கல் – 8).
- சம்பளம்: மாதம் ரூ.30,000 முதல் தொடங்கும். இது போக, வருடத்திற்கு ரூ.12,000 அலவன்ஸ் மற்றும் இதர சலுகைகள் உண்டு. அனுபவம் ஏற ஏற சம்பளமும் எகிறும்!
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பி.இ (B.E) அல்லது பி.டெக் (B.Tech) முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (OBC-க்கு 3 ஆண்டுகள், SC/ST-க்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு).
செலக்ஷன் எப்படி?
பெரிய இன்டர்வியூ, குரூப் டிஸ்கஷன் என்று பயமுறுத்தாமல், சிம்பிளாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
- எழுத்துத் தேர்வு (Written Test): வரும் ஜனவரி 11, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடக்கிறது.
இதில் பாஸ் ஆனால் வேலை உறுதி!
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு முடியப் போகிறது.
- ரிஜிஸ்ட்ரேஷன்: www.bel-india.in என்ற இணையதளத்திற்குச் சென்று, அங்கே கொடுக்கப்பட்டுள்ள QR கோட் அல்லது லிங்க் மூலமாகப் பதிவு செய்ய வேண்டும்.
- கடைசி தேதி: ஆன்லைன் பதிவுக்கு ஜனவரி 9, 2026 தான் கடைசி நாள். (இன்னும் 2 நாள் தான் இருக்கு!).
- கட்டணம்: ரூ.150 + GST. (SC/ST பிரிவினருக்குக் கட்டணம் இல்லை).
சும்மா ஒரு ட்ரை பண்ணுங்க… அதிர்ஷ்டம் அடிச்சா லைஃபே செட்டில்!
- டைம் இல்ல: ஜனவரி 9ஆம் தேதிக்குள்ள ரிஜிஸ்டர் பண்ணனும். கடைசி நேரத்துல சர்வர் ஸ்லோ ஆகும், இப்பவே பண்ணிடுங்க.
- எக்ஸாம் சென்டர்: எழுத்துத் தேர்வு காசியாபாத் (உத்தரப் பிரதேசம்) நகரில் நடக்கலாம். வடமாநிலம் என்று யோசிக்காதீர்கள். ஒரு முறை கஷ்டப்பட்டுப் போய் எழுதிட்டால், மத்திய அரசு நிறுவனத்தில் வேலை கிடைக்கும் கெத்து தனி!
- சிலபஸ் ஈஸி: உங்க சப்ஜெக்ட் அறிவு தான் முக்கியம். பேசிக்ஸ் ஸ்ட்ராங்கா இருந்தாலே போதும்.
வரும் ஞாயிறு (ஜனவரி 11) எக்ஸாம். டிக்கெட் புக் பண்ண ரெடியாகுங்க!
