பாபா ராம்தேவின் பதஞ்சலி நூடுல்ஸ் தரம் இல்லை!

Published On:

| By Balaji

பிரபல யோகா குருவான ராம்தேவ் தனது ஆசிரமத்தின் நிறுவனம் மூலம், பல்வேறு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களைத் தயாரித்து, பதஞ்சலி என்ற பெயரில் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறார். சமீபத்தில் கோதுமை நூடுல்ஸை தயார் செய்து நாடு முழுவதும் அறிமுகப்படுத்தினர். இந்த உணவை, உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள உணவு பாதுகாப்பு, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் பதஞ்சலி நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு உகந்ததாக தரம் இல்லாமல் உள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறியதாவது, நூடுல்ஸ்களில் 1சதவீதம் அளவுக்கு சாம்பல் கலந்திருக்கலாம் என்று சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. ஆனால், பதஞ்சலி நூடுல்ஸில் 3 மடங்கு சாம்பல் கலந்திருக்கிறது. எனவே இது சாப்பிடுவதற்கு தகுதியற்றது. மேலும், இது தொடர்பாக ஆய்வு செய்ய லக்னோ, கொல்கத்தா ஆய்வுக் கூடங்களுக்கும் பதஞ்சலி நூடுல்ஸை அனுப்பி உள்ளோம். அந்த ஆய்வுகளிலும் தரம் குறைந்தது என்று உறுதி செய்யப்பட்டால் வழக்கு தொடருவோம் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆன்டு, இந்தியாவில் மேகி, ஹிப்பி நூடுல்ஸ் தரம் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டது. அண்மையில்தான் மீண்டும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share