சென்னையில் பிஎல் சந்தோஷ்.. அண்ணாமலையிடம் சமாதான பேச்சு?

Published On:

| By Mathi

B.L. Santhosh Annamalai

பாஜகவின் தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வருகை தந்துள்ளார். தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்து மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவைத் தொடர்ந்து டிடிவி தினகரன் மீண்டும் இணைந்துள்ளார். தேமுதிகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இதனிடையே தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழக பாஜகவுக்கான டெல்லி மேலிடப் பொறுப்பாளர் பிஎல் சந்தோஷ் இன்று பிப்ரவரி 9-ந் தேதி சென்னை வருகை தந்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பிஎல் சந்தோஷ் தங்கி உள்ளார்.

ADVERTISEMENT

பாஜகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து பிஎல் சந்தோஷ் ஆலோசனை நடத்துகிறார். மேலும், தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகிய அண்ணாமலையை சந்தித்து அவரை சமாதானப்படுத்தவும் பிஎல் சந்தோஷ் முயற்சிக்கக் கூடும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share