ரயில் பயணிகளின் கவனத்திற்கு… வெயிட்டிங் லிஸ்ட்டில் புதிய மாற்றம்!

Published On:

| By Kavi

attention to rail passengers

மே 1 முதல் காத்திருப்புப் பட்டியலில் உள்ள ரயில் பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில்  பயணம் செய்ய முடியாது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. attention to rail passengers

இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்று ரயில்வே துறை.  2023-2024 தரவுகள் படி நாளொன்றுக்கு 13,198 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 6.905 பில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர்.  

ADVERTISEMENT

இப்படி அதிக மக்கள் பயணிக்கும் ரயில்களில் இந்திய ரயில்வே முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

அதன்படி,  காத்திருப்பு டிக்கெட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய இனி அனுமதி இல்லை . காத்திருப்பு டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்கள் இனி பொதுப் பெட்டியில் மட்டுமே பயணம் செய்ய முடியும்.  

ADVERTISEMENT

இந்த முடிவு ரயில்வேயில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதையும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு சிறந்த வசதிகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது என ரயில்வே கூறியுள்ளது.

உறுதி செய்யப்படாத டிக்கெட்களை வைத்திருப்போர், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்க, டிக்கெட் பரிசோதகர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ஐஆர்சிடிசி மூலம் முன்பதிவு செய்யப்பட்டு, அந்த டிக்கெட்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், தானாகவே காலாவதியாகி, பயணிகளுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை தொடரும் என்றும் ரயில்வே கூறியுள்ளது.  attention to rail passengers

அதுபோன்று இதுவரை அனைத்து தட்கல் புக்கிங்கும் காலை 11 மணிக்கு தொடங்கும் நிலையில் தற்போது ஏசி வகுப்புகளுக்கான தட்கல் புக்கிங் தினசரி காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்புகள் தட்கல் புக்கிங் வழக்கம்போல தினசரி காலை 11 மணிக்கும் தொடங்கும்.

டிக்கெட் புக்கிங் செய்தவர்கள் 48 மணி நேரத்திற்கும் முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் 75 சதவீத டிக்கெட் பணம் திரும்ப கிடைக்கும். ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50 சதவீத பணம் திரும்ப கிடைக்கும். 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப கிடைக்காது. 

இந்த புதிய நடைமுறைகள் எல்லாம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.  attention to rail passengers

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share