பாஜக ‘சுற்றுப் பயண பொறுப்பாளர்கள்’ அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை, பொன்னார், கே.டி. ராகவனுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை?

Published On:

| By Mathi

BJP Tamil Nadu

மிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சட்டப்பேரவை தொகுதிகளின் பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

சிங்காநல்லூர்
மதுரை தெற்கு
விருகம்பாக்கம்
காரைக்குடி
ஸ்ரீவைகுண்டம்
பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை

திருப்பரங்குன்றம்
ராதாபுரம்
வால்பாறை
திருப்பூர் வடக்கு
உதகமண்டலம் ஆகிய தொகுதிகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுற்றுப்பயணம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தமிழிசை சவுந்தரராஜனுக்கு
மயிலாப்பூர்
கும்மிடிப்பூண்டி
நாங்குநேரி
பொள்ளாச்சி
கிள்ளியூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு

ADVERTISEMENT

பழனி
தென்காசி
மேட்டுப்பாளையம்
பரமக்குடி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கேடி ராகவனுக்கு

வானூர்
பூவிருந்தவல்லி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சுற்றுப் பயண பொறுப்பாளர்களுக்கான நயினார் நாகேந்திரனின் அறிவுறுத்தல்கள்:

  1. தங்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு சட்டமன்ற தொகுதியிலிருந்து அதிகபட்சமாக ஏழு சட்டமன்ற தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
  2. இந்த சட்டமன்ற தொகுதியில் நாம் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது முழுமையான சுற்றுப்பயணத்தை நடத்த வேண்டும்.
  3. இந்த சட்டமன்றத்தில், ஒவ்வொரு முறையும் நமது சுற்றுப் பயணத்தின் போது நாம் 24 மணி நேரம் செலவிட வேண்டும் (இரவு தங்கி வர வேண்டும்).
  4. சமுதாயத் தலைவர்கள் சந்திப்பு.
  5. சட்டமன்ற குழுவோடு சந்திப்பு.
  6. தொகுதியில் உள்ள மாவட்ட, மண்டல் அணி நிர்வாகிகளோடு சந்திப்பு.
  7. தொகுதியில் உள்ள பிரிவு நிர்வாகிகளோடு சந்திப்பு.
  8. ஒரு சக்தி கேந்திரத்திற்கு நேரடியாக சென்று ஊக்கப்படுத்துதல்.
  9. ஒரு பூத்திற்கு நேரடியாக சென்று பலம் வாய்ந்த பூத் பற்றி வழிகாட்டுதல்.
  10. காரியகர்த்தாவோடு தனிப்பட்ட முறையில் பேசுதல்.
  11. ஒரு தொகுதி வெற்றிபெறுவதற்கான வழிமுறைகள் (உதா: நேரம் கொடுத்தல், ஒருங்கிணைந்து திட்டமிட்டு பணி செய்தல், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளோடு இணைந்து செல்லுதல், தொகுதி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோள், etc…)
  12. எல்லா நிகழ்வும் ஒரு சுற்று பயணத்தில் முடிக்க வேண்டும் என்று பாராமல் தொடர் சுற்றுப்பயணத்திலும், தொகுதிக்கு தகுந்தவாறு நாம் திட்டமிடலாம். இது ஒரு வழிகாட்டுதல் மட்டும்தான். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share