செப்டம்பர் 8ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.
2026 27 ஆம் நிதி ஆண்டின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று முடிவு எடுப்பது தொடர்பாக அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வரும் செப்டம்பர் 8ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காலை 9:30 மணிக்கு தொடங்கி தேவைப்பட்டால் மாலை 6 மணி வரை சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெறும் என்றும், கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல்…
நாளை வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி இரங்கல் குறிப்புகள், இரங்கல் தீர்மானம் மற்றும் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும்.
ஆகஸ்ட் 8 9 அரசு விடுமுறை.
ஆகஸ்ட் 10, 11 பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறும்.
ஆகஸ்ட் 12ஆம் தேதி பொது விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும்.
ஆகஸ்ட் 13 ,14 பேரவை கூட்டம் இல்லை.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 அரசு விடுமுறை.
ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும்.
