ADVERTISEMENT

கரூர் பெருந்துயர் குறித்து விசாரணையை தொடங்கியது ஒரு நபர் விசாரணை ஆணையம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Aruna Jagatheesans in person inspection at Karur

கரூரில் நடந்த விஜய்யின் தவெக பிரச்சார கூட்டத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்தது.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 28) பிற்பகலில் கரூர் சென்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் சம்பவம் நடத்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். சம்பவ இடத்தில் இருக்கும் மக்கள், போலீசாரிடம் விபரங்களை கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி அருணா ஜெகதீசன் “குறைபாடுகளை களைய வேண்டும். அதற்கு தான் ஆணையம். இந்த மாதிரி சம்பவம் இனி நடக்கக் கூடாது. அதற்கு என்ன நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share