அழைக்கிறார் அருண் ஜெட்லி!

Published On:

| By Balaji

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நான்கு நாட்கள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆஸ்திரேலியப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ள அருண் ஜெட்லி, நேற்று நடந்த சிறப்பு இரவு விருந்தில் கலந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பில் பேசிய அருண் ஜெட்லி, விளையாட்டில் மட்டுமல்ல; வர்த்தகம், கலாச்சாரம், அரசியல் மற்றும் அரசு ரீதியிலான உறவுகளும் இரு நாடுகளுக்கு இடையே வலுப்பட வேண்டும். இவைதான், நமது எதிர்கால இலக்குகளைத் தீர்மானிக்கும். இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியா முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.”

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share