தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 10) காலை உலகம் முழுவதும் வெளியானது. arjun das emotional letter to ajith good bad ugly
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தில் அஜித்துடன் நடித்தது குறித்து அர்ஜூன் தாஸ், பிரசன்னா ஆகியோர் வெளியிட்டுள்ள உருக்கமான கடிதம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
படத்தில் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் தாஸ் கூறுகையில், ”டி’ஒனில் மார்க்கெட்டிங் & விளம்பர பிரிவில் அஜித் சாரின் படங்களுக்கு பணியாற்றியபோது, அவருடன் நடிப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு, அது தற்போது நடந்திருக்கிறது.
அப்போது நாங்கள் இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலையில் தியேட்டருக்குச் சென்று ரசிகர்களின் வரவேற்பைக் கவனித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இன்றும் அதே டி’ஒன் பையனாக அதை மீண்டும் செய்ய போகிறேன், ஒரே வித்தியாசம் என்னவென்றால், நான் அவருடன் திரையைப் பகிர்ந்து கொண்ட என்னையும் அதில் பார்க்க முடியும்.
என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி அஜித் சார். உங்களுடன் பணிபுரிந்த ஒவ்வொரு நாளும், உங்களின் குணம், தாராள மனப்பான்மை, உரையாடல்கள், நகைச்சுவைகள், கேலிகள், கார் பயணங்கள் மற்றும் நீங்கள் தந்த அனைத்து ஆலோசனைகளையும் ரசித்தேன். இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன், மீண்டும் சொல்கிறேன் என்னால் உங்களுடன் மீண்டும் பணியாற்ற முடியும் என நான் உண்மையிலேயே நம்புகிறேன்.
அஜித் சாரின் ரசிகர்களுக்கு – உங்கள் அனைவரின் அன்பிற்கும் மிக்க நன்றி. நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். குட் பேட் அக்லி படத்தைப் பார்த்து நீங்கள் அனைவரும் ஒரு முழு மகிழ்ச்சியைப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.
ஆதிக் சகோதரா – என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. உங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.
அதே போன்று பிரசன்னா தனது எக்ஸ் பக்கத்தில், “என் பிரியமான ஆளுமையுடன் திரையை பகிர்ந்து கொள்வது குறித்த எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் வரவில்லை! அஜித்துடன் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் மறக்கமுடியவில்லை. நன்றி அஜித் சார். லவ் யூ” எனத் தெரிவித்துள்ளார்.