நீர்மோர் பந்தல் அமைக்க அரசியல் கட்சிகளுக்கு தடையா?

Published On:

| By Balaji

கோடைக்காலம் என்றாலே அரசியல் கட்சியினர், மற்றும் தனியார் நிறுவனங்கள் சென்னையில் மக்களின் தாகம் தனிக்க நீர் மோர் பந்தலைத் தொடங்கிவிடுவார்கள்.

இந்த ஆண்டு கோடை நெருங்கிவிட்டதால் சென்னையில் சூரியன் சுட்டெரித்துவருகிறது. தற்போது தேர்தல் விதி நடைமுறையில் இருப்பதால் அரசியல் கட்சிகள் நீர் மோர் பந்தல் அமைக்கலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரி சிவஞானம் கூறியதாவது, “கோடைக்காலங்களில் அரசியல் கட்சிகள் பொதுமக்களின் நலனுக்காக நீர்மோர் பந்தல் அமைக்க எந்த தடையும் இல்லை. இதற்காக உள்ளூர் போலீஸாரிடமும், அந்தப் பகுதி தேர்தல் அதிகாரியிடமும் அனுமதி பெற வேண்டும். ஆனால், நீர் மோர் பந்தலில் கட்சிக்கொடி, தேர்தல் சின்னம், கட்சித் தலைவரின் படம் இடம்பெற்றால், பந்தல் செலவு, நீர்மோர் செலவு அனைத்தும் கட்சியின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். பந்தலில் வேட்பாளரின் படம் இடம்பெற்றிருந்தால் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். தனியார் நிறுவனங்கள் போலீஸ் அனுமதி பெற்று அரசியல் கட்சி அடையாளங்கள் இன்றி நீர் மோர் பந்தலை அமைத்துக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share