நள்ளிரவில் அலறிய அலாரம்.. செல்போனுக்கு வந்த மெசேஜ்! அரவக்குறிச்சி SBI வங்கியில் கொள்ளை முயற்சி

Published On:

| By Pandeeswari Gurusamy

அரவக்குறிச்சி அருகே எஸ்பிஐ வங்கியில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள கோவிலூர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அலாரத்தை சேதப்படுத்தியும் சிசிடிவி கேமராக்கள் மீது ஸ்ப்ரே அடித்தும் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

ADVERTISEMENT

வங்கிக்குள் இருந்த லாக்கர் பூட்டை உடைக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள், கொள்ளை முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

லாக்கர் பூட்டை உடைக்க முயன்றபோது வங்கி ஊழியர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி சென்றதால், அவர்கள் உடனடியாக வங்கிக்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது கொள்ளை முயற்சி நடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share