எம்.எட் சேர விரும்பும் மாணவர்களுக்கு… உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

Application registration for M.Ed students

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன.

ADVERTISEMENT

இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (11.08.2025) முதல் இணையவழியில் தொடங்கும்.

மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். இந்த இணையதள முகவரியில் 20.08.2025 பதிவு செய்ய உயர்க்கல்வித் துறை வழிவகை செய்துள்ளது.

ADVERTISEMENT


இதற்கான தரவரிசைப் பட்டியல் 25.08.2025 அன்று வெளியிடப்படும். மாணாக்கர் சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும். முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2025 அன்று முதல் துவங்கும் என்று உயர்க்கல்வித் துறை இன்று (ஆகஸ்ட் 11) அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share