சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், இதுவரை வாசகர்களுக்கு குறிப்பு எடுக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.
ஆறு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை உள்ளடக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், வருடந்தோறும் லட்சக்கணக்கான வாசகர்கள் வந்து இங்குள்ள புத்தகங்களை பயன்படுத்தி குறிப்புகள் எடுத்து வருகின்றனர்.
இதனால் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி, போட்டித்தேர்வினை எழுதுவோருக்கும் இந்த நூலகம் ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் வாசகர்கள்,போட்டித்தேர்வுக்கு தயாராகுவோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது வாசகர்கள் வீட்டிற்கே புத்தகங்களை எடுத்து செல்லும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுமார் ஆறு லட்சம் புத்தகங்களை உள்ளடக்கிய இந்த நூலகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்களை, வாசகர்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இந்த சூப்பர் திட்டமானது, வருகின்ற மார்ச் 12-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
-மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…