மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக, சென்னையின் முக்கிய இடங்களில் இன்றும் (மார்ச் 9 ), நாளையும் (மார்ச் 10) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்துக் காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சேத்துப்பட்டிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் காலேஜ் ரோடு, ஹோட்டல் ரோடு, உத்தமர் காந்தி சாலை வழியாக அண்ணா மேம்பாலத்தை அடையும் வகையில் திருப்பி விடப்படும்.
இந்த மாற்றுப்பாதை ஒருவழிப்பாதையாக செயல்படும். இதேபோல் அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, டாக்டர் எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் டேங்க்பண்ட் சாலையின் இடது புறம் திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்கு செல்லலாம்.
வள்ளுவர் கோட்டத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, ஸ்டெர்லிங் சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்பட்டு தங்கள் இலக்கை அடையலாம்.
மற்ற பிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிப்பாதை போக்குவரத்து மாற்றத்துக்குத் தகுந்தாற்படி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். வாகனங்களில் செல்வோர் இதற்கு ஏற்ப பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IND vs ENG : டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய ‘வரலாறு’ படைத்த பவுலர்!
போதைப்பொருள் புழக்கம்: எக்ஸ் பயோவை மாற்றிய எடப்பாடி