ADVERTISEMENT

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி கைது!

Published On:

| By christopher

ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (செப்டம்பர் 9) காலை கைது செய்யப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஏ1 குற்றவாளியாக உள்ளார். அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என்று குறிப்பிட்டு, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் நந்தியால் நகரத்தில் உள்ள ஆர்.கே. ஃபங்ஷன் ஹாலில் உள்ள நாயுடுவின் முகாமுக்குச் சென்றனர். அப்போது அவர் தனது கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

எனினும், தான் கைது செய்யப்படுவேன் என சந்திரபாபு நாயுடு முன்பே தெரிவித்திருந்த நிலையில் அங்கு ஏராளமான தெலுங்கு தேசக் கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

ADVERTISEMENT

கைது செய்ய வந்த போலீசாருக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் சுமார் 3 மணி நேரம் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

ADVERTISEMENT

அதன்பின்னர், காலை 6 மணியளவில், போலீசார் சந்திரபாபு நாயுடு இருந்த கேரவன் கதவுகளைத் தட்டி, அவரை கீழே இறக்கி, அவரிடம் வாரண்ட் குறித்து விளக்கமளித்து கைது செய்தனர்.

போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அவர் விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு மீது 120(8), 166, 167, 418, 420, 465, 468, 471, 409 ஆகிய குற்றவியல் நடைமுறைச் சட்ட  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கொள்ளி போட வேண்டியது மூத்தவனா இளையவனா?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share