ரூ.100 கோடி மோசடி வழக்கு… : முன் ஜாமீன் கேட்கும் அன்பில் மகேஷ்

Published On:

| By Kavi

ரூ.100 கோடி மோசடி தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த எப்.ஐ.ஆரை ரத்து செய்ய கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் அவர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share