திருச்சியில் விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே கூட்டத்துக்கு நடுவில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததால், அதற்கு இடையூறு ஏற்படாமல் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
திருச்சி மரக்கடை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பிரச்சாரத்திற்கு நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி வழங்கியது.
அவ்விடத்தில் விஜய் உரையாற்றுவதற்கு போலீசார் அரை மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கினர்.
இந்த நிலையில், தொண்டர்களின் படைக்கு மத்தியில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
கிட்னி திருட்டு, மணல் கொள்ளை, திமுகவின் வாக்குறுதிகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசினார். திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த பயனும் இல்லை என்றும் விமர்சித்தார்.
இந்த சூழலில் விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே தவெக கூட்டத்துக்கு நடுவே ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே அதிமுக பிரச்சாரக் கூட்டங்களில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ் நுழைந்தது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த சூழலில், விஜய் பிரச்சார கூட்டத்திலும் ஆம்புலன்ஸ் நுழைந்தது பேசு பொருளாகி உள்ளது.
