மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கிறதா என்பது குறித்து அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக அரசியல் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 7) சென்னையில் செய்தியாளார்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “எங்களுடைய நிலைப்பாட்டை இன்னும் கொஞ்ச நாளில் சொல்வோம். சி.வி.சண்முகம் ராமதாஸை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. அவரது குடும்ப நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காக வந்திருந்தார். அதை தவிர அவர்கள் அதை பேசினார்கள், இதை பேசினார்கள் என நீங்களே எதுவும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.
கூட்டணி தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறோம். யாருடன், எப்படி பேசுகிறோம் என இப்போது சொல்ல முடியாது.
எங்களுடைய நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். பொதுக்குழுவில் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எங்களுடைய நிலைப்பாட்டை சொல்வதற்குள் எதற்கு வதந்தி பரப்புகிறீர்கள்” என கேள்வி எழுப்பினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
திடீர் மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் பலி!
தேர்தல் கூட்டணி – பிரேமலதாவுக்கு அதிகாரம் : தேமுதிக தீர்மானம்!