திடீர் மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் பலி!

Published On:

| By christopher

வீடு கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக புதிய வீடு கட்டுமான பணி நடைபெற்று வந்தது.

அங்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் திடீர் மண்சரிவு ஏற்பட்டது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் தகவலறிந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினரும் மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி 6 பெண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், செல்லும் வழியிலேயே ஷகிலா (30), சங்கீதா(35), பாக்யா(36), உமா(35), முத்துலட்சுமி (36) உட்பட 6 பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மண்சரிவில் சிக்கியுள்ள மற்றவர்களையும் மீட்கும் முயற்சியில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அடுத்த 6 நாட்களுக்கு எதிர்பார்க்காதீங்க : வானிலை மையம் எச்சரிக்கை!

தேர்தல் கூட்டணி – பிரேமலதாவுக்கு அதிகாரம் : தேமுதிக தீர்மானம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel