டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

Published On:

| By Mathi

Delhi EPS

டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்.

அதிமுக- பாஜக கூட்டணியில் இடம் பெறக் கூடிய கட்சிகள், அவைகளுக்கான தொகுதிகள் குறித்து தமிழகம் வந்திருந்த அமித்ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். இதனையடுத்து டெல்லி சென்ற எஸ்.பி.வேலுமணி பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

இச்சந்திப்பைத் தொடர்ந்து இன்று பிற்பகல் சென்னையில் இருந்து டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் தற்போது அமித்ஷாவை அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வருகிறார்.

அதிமுக-பாஜக கூட்டணியில், ஓபிஎஸ், டிடிவி தினகரன் அமமுக, பாமக ராமதாஸ், தேமுதிகவை சேர்க்க வேண்டும் என்பது மோடியின் உத்தரவு; இது தொடர்பாகவே அமித்ஷாவுடனான எடப்பாடியின் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

போன முறை மாதிரி செஞ்சுடாதீங்க..

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை இரவு சந்திக்கப் போகிறேன். போனமுறை போல போட்டுவிடாதீங்க (கடந்த முறை டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த கர்சீப்பால் எடப்பாடி முகத்தை மறைத்ததாக வீடியோ வெளியானது) என கேட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share