நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச விருது

Published On:

| By Balaji

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹென்ரி லாங்க்லாய்ஸ், உலக சினிமா வரலாற்றில் மிக முக்கியமானவர். உலகப் போருக்கு முந்தைய காலங்களைச் சேர்ந்த திரைப்படங்களைச் சேகரித்த ஆவணக் காப்பாளராகவும், சினிமா உலகில் இவர் செயலாற்றிய முக்கியப் பணிகளுக்காகவும் இவருக்கு கெளரவ ஆஸ்கர் வழங்கப்பட்டது.

இவரது மறைவுக்குப்பிறகு, இவரது பெயரில் திரை உலகில் முக்கியப் பங்களிப்பு வழங்கும் திரைப் பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த விழாவில் கமல்ஹாசன் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

இதன்பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாரிஸில் ஹென்ரி லாங்க்லாய்ஸ் விருதைப் பெற்றுக்கொண்டேன். இந்தநேரத்தில் எனது குரு அனந்து சார் உயிரோடு இருந்திருக்க வேண்டும். இந்த விருதை எனக்கு அறிமுகம் செய்தவரே அவர்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share