உழைப்பால் உயர்ந்த சமூகம்: பிரிட்டனில் இந்தியர்களின் சாதனை!

Published On:

| By Kavi

பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளியினர், அந்நாட்டின் பொருளாதாரம், சமூக வளர்ச்சி, கல்வி மற்றும் அரசியலில் மிக உயரிய இடத்தை அடைந்து  வருகின்றனர்.

இதுதொடர்பான புள்ளிவிவரத்தை, British Indians Voice தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

அதில்,

தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இந்தியர்கள்.

ADVERTISEMENT

20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள்.  

பிரிட்டன் மக்கள் தொகையில்  2.9%.

ADVERTISEMENT

பிரிட்டனில் மிக அதிக அளவில் வாழும் சிறுபான்மையினக் குழுவாக இந்திய சமூகத்தினர் உள்ளனர்.

74% பேர் சொந்த வீடு வைத்துள்ளனர். இது வெள்ளையினப் பிரிட்டிஷாரை (68%) விட அதிகம்.

76% வேலைவாய்ப்பு விகிதம்.  அனைத்து இனக் குழுக்களையும் விட முன்னணியில் உள்ளனர். 

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் மிகக் குறைந்த குற்றப் பதிவுகளைக் கொண்ட சமூகமாக உள்ளனர். 

பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகளில் (GCSE) சீன மாணவர்களுக்கு அடுத்தபடியாக, 2ஆவது மிகச் சிறந்த கல்வித் திறனை இந்திய மாணவர்கள் பெற்றுள்ளனர்.

அந்நாட்டு அரசு சுகாதாரத் துறையில் பணியாற்றும் 6 மருத்துவ வல்லுநர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

பிரிட்டன் இறக்குமதி செய்யும் மருந்துகளில் 25% இந்தியாவில் இருந்து வருகின்றன.

1,912 இந்திய நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றின் ட்ர்ன் ஓவர் £105.77 பில்லியன் ஆகும்.  இந்நிறுவனங்கள் 2,00,000-க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.

விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின்படி,   இருதரப்பு வர்த்தகம் £47.4 பில்லியன் ஆக உள்ளது.

ஒரு பிரதமர்.

பீகாரில் வளர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர்.

29 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

இவை எதுவும் தற்செயலாக நிகழவில்லை.

எந்தவொரு பின்னணியும் இல்லாமல் வெறும் கையோடு வந்த ஒரு சமூகம், ‘நாம் அடைந்த வெற்றி இத்தோடு போதும்’ என்று திருப்தியடைந்து முடங்கிவிடாமல், அமைதியான முறையில் உழைத்துக்கொண்டே இருந்ததால் இந்த சாதனை சாத்தியமானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share