சூரியின் படப்பிடிப்பில் திக் திக் சம்பவம்.. மண்டாடி படப்பிடிப்பில் படகு கவிழ்ந்த வீடியோ வைரல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

soori

நடிகர் சூரியின் மண்டாடி படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளான திருப்பாலைக்குடி, பாசிப்பட்டினம், தொண்டி கடற்கரை பகுதிகளில் நடந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி தொண்டி அருகே கடற்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது படகு ஒன்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. கவிழ்ந்த படகில் அந்த திரைப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பல லட்சம் மதிப்புள்ள கேமரா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. விபத்தில் படகில் இருந்த கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் கடலில் விழுந்தது. இதைத்தொடர்ந்து வேகமாக செயல்பட்ட படக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளனர்.

இதனால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இந்த விபத்தில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கேமராக்கள், லென்ஸ்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share