எஸ்ஐஆர் மோசடி… எப்போது வாயை திறப்பீர்கள்? முதல்வர் விஜய்க்கு ஆ.ராசா கேள்வி!

Published On:

| By Kavi

எஸ்ஐஆர் மோசடி தொடர்பாக எப்போது வாயை திறப்பீர்கள் என்று முதலமைச்சர் விஜய்க்கு திமுக எம்.பி-யும், துணை பொதுச்செயலாளருமான ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ADVERTISEMENT

ஆனால் இந்தப் பணியின் போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்படுவதாக மற்ற தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோசி இருவரும் 14 முறை ஆட்சேபனை தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த செய்தி வெளியானதில் இருந்து தேர்தல் ஆணையருக்கு எதிரான குரல்கள் அதிகரித்து வருகின்றன. அவர் தேர்தல் ஆணையர் பதவியில் நீடிக்க கூடாது என்று இந்திய அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஞானேஷ்குமார் விவகாரம் தொடர்பாக இதுவரை முதல்வர் விஜய் எதுவும் பேசவில்லை.

ADVERTISEMENT

இது தொடர்பாக திமுக எம்பி ஆ. ராசா இன்று (செப்டம்பர் 27)தனது ட்விட்டர் பக்கத்தில், “எஸ்ஜஆர் மோசடி: எப்போ வாய் திறப்பீங்க CM சார்? கொள்கை எதிரிக்கு மட்டுமல்ல; CBI, ECI என அவங்க அடியாட்களை பார்த்தாலும் அஞ்சி நடுங்கிக்கொண்டே இருப்பீங்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share