“விஜய் சொல்வது அப்பட்டமான பொய்” : எடப்பாடி பழனிசாமி பதிலடி!

Published On:

| By Kavi

மதுராந்தகத்தில் நேற்று இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் விஜய், ஜெம் வீரமணி வழக்குத் தொடர்பாக முந்தைய அரசுகளை குற்றம்சாட்டி பேசினார்.

ஜெம் வீரமணி வழக்குத் தொடர்பாக முந்தைய ஆட்சியாளர்கள் வாய் திறக்கவில்லை என்று கூறினார். அதாவது, ”திமுகவோட சேர்ந்த அந்த மற்றும் பலரும் வாய திறக்காம இருக்காங்க. இதுல கூடவா கூட்டு? இதுல கூடவா கூட்டு சேர்ந்துக்கிட்டு வாய திறக்காம இருப்பீங்க?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 26) மதுராந்தகத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், ”திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கின்ற பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்துக்கு அது சென்றபொழுது, தகுந்த ஆதாரம் இல்லை, அந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கூறியபோது நீதிபதி ஏற்கவில்லை. 

ADVERTISEMENT

பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில 19.6.2026ல் இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வருகின்றது. அப்பொழுது இருந்த காவல்துறை அதிகாரிகள் வாய்தா கேட்கின்ற பொழுது, நீதிபதி ‘நாலு வாரத்திற்கு பிறகு முழு விவரமும் சமர்ப்பிக்கப்பட வேண்டும், இது குறித்த அறிக்கை நீதிமன்றத்திலே நீங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என்று உத்தரவிடுகின்றார்.

அதற்குப் பிறகு 23.8.2026-ல் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகின்றது. அப்பொழுதும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை, மீண்டும் வாய்தா கேட்கின்றார்கள்.

ADVERTISEMENT

27.8.26-இல் அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வருகின்றபொழுது, அரசு வழக்கறிஞர் எங்களுக்குத் தடயவியல் துறை அறிக்கை நிலுவையிலே உள்ளது என்று குறிப்பிடுகின்றார்.

ஆனால் நீதிபதி, ‘பலமுறை வாய்தா கொடுக்கப்பட்டுவிட்டது, தொடர்ந்து நீங்கள் வாய்தா கேட்டுக்கொண்டு இந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றீர்கள், ஆகவே உடனடியாக சிறுமிகளை சீரழிக்கப்பட்ட ஜெம் வீரமணியை கைது செய்ய வேண்டும்’ என்று உத்தரவை வழங்குகின்றார். அந்த அடிப்படையில் தான் இந்த அரசாங்கம் கைது செய்கிறது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் கைது செய்யப்படவில்லை, நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் கைது செய்யப்படுகின்றது.

ஆக, நேற்றைய தினம் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த கருத்தைச் சொன்னது அப்பட்டமான பொய். சினிமாவில் தான் நடிக்கின்றார் என்று சொன்னால், நிஜ வாழ்க்கையிலும் நடித்துக்கொண்டிருக்கின்றார் என்பது அம்பலமாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share