“அமைச்சர்களுக்கே இந்த நிலையா?” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் தாக்கு!

Published On:

| By Kavi

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை காரணமாக நீதிபதி, அமைச்சர்கள் முதல் சாமானிய மக்கள் வரை பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இந்தநிலையில் இன்று மதுரை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கலந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் போதே மின்சாரம் கட் ஆனது. இந்த நிகழ்ச்சியில் மின்சார துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாரும் கலந்துகொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், மின்வெட்டு தொடர்பாக முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்.

அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.

ADVERTISEMENT

இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் தடையற்ற, சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரிய தலைமையகத்தில் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி முதல்வர் விஜய் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share