சென்னையில் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 4) சவரனுக்கு ரூ. 840 உயர்ந்துள்ளது. 960 840 gold price at rocket speed!
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 105 உயர்ந்து ரூ.7,810-க்கும், ஒரு சவரன் ரூ. 840 உயர்ந்து ரூ. 62,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 115 உயர்ந்து ரூ. 8,520-க்கும், ஒரு சவரன் ரூ. 920 உயர்ந்து ரூ. 68,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.106-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1000 உயர்ந்து ரூ.1,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜனவரி 31ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 960 உயர்ந்த நிலையில், இன்று ரூ. 840 உயர்ந்துள்ளது நகைபிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.