தென்காசி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

8 people killed in road accident near Tenkasi

தென்காசி மாவட்டம், இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் எம்.ஆர்.கோபாலன் என்ற தனியார் பேருந்தும், கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில், 6 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. பேருந்தில் இருந்த ஏராளமான பயணிகள் காயம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

ADVERTISEMENT

விபத்து நடந்த பகுதியில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில், சிறுவர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share