இந்திய பங்குச்சந்தையின் முதன்மை சந்தையில் இன்று (செப்டம்பர் 9) பரபரப்பான நாளாக அமைந்துள்ளது. ஒரே நாளில் 6 மெயின்போர்டு ஐபிஓக்கள் முதலீட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆறு நிறுவனங்களும் சேர்ந்து சுமார் ரூ.4,509 கோடியை சந்தையில் திரட்ட உள்ளன.
எந்தெந்த நிறுவனங்களின் ஐபிஓ?
Rentomojo, Asset Reconstruction Company (India), Manipal Payment & Identity Solutions, Steamhouse India, LCC Projects மற்றும் Karamtara Engineering ஆகிய நிறுவனங்களின் ஐபிஓக்கள் இன்று தொடங்கியுள்ளன.
இதில் Rentomojo அதிகபட்சமாக ரூ.1,255.57 கோடியையும், Karamtara Engineering ரூ.875 கோடியையும் திரட்டுகின்றன. Manipal Payment & Identity Solutions ரூ.805 கோடி நிதியை திரட்டுகிறது.
விலை நிலவரம் என்ன?
Rentomojo பங்கின் விலை ரூ.384 முதல் ரூ.404 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Karamtara Engineering பங்கு விலை ரூ.241–254 ஆகவும், Manipal Payment & Identity Solutions ரூ.322–339 ஆகவும் உள்ளது.
Steamhouse India ரூ.77–81, LCC Projects ரூ.139–146, Asset Reconstruction Company ரூ.132–139 என்ற விலை வரம்பில் பங்குகளை வெளியிடுகின்றன. அனைத்து ஐபிஓக்களுக்கும் செப்டம்பர் 11 கடைசி நாளாகும்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது
ஒரே நேரத்தில் பல ஐபிஓக்கள் களமிறங்கியிருப்பதால், முதலீட்டாளர்களுக்கு தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில், எல்லா ஐபிஓக்களிலும் அவசரமாக முதலீடு செய்வது சரியான அணுகுமுறை அல்ல.
நிறுவனத்தின் நிதிநிலை, மதிப்பீடு, வளர்ச்சி வாய்ப்பு, கடன் நிலை மற்றும் ஐபிஓ மூலம் திரட்டப்படும் பணம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பவற்றை ஆராய்ந்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். சந்தை நிபுணர்களும் இந்த முறை முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுத்து செயல்பட வேண்டிய சூழல் எனக் குறிப்பிடுகின்றனர்.
