5 லட்சம் அரசு பணியிடங்கள் : நிரப்புவது எப்போது?

Published On:

| By vanangamudi

5 lakh government posts

தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேரை கூட அரசு பணியிடங்களில் நியமிக்கவில்லை என்று ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணன் கூறினார். 5 lakh government posts

தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிய ஊழியர்களில் 8,144 பேர் கடந்த மே 31 அன்று ஒரே நாளில் ஓய்வு பெற்றனர். இந்தசூழலில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று அரசு ஊழியர்கள் சங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணன் மின்னம்பலத்திடம் கூறுகையில், “2001 முதல் 2006 வரை புதிய நியமனங்கள் இல்லை. 2003ல் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த காலத்தில் 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்ற அடிப்படையில் ஆட்களை எடுத்தனர். அவர்களில் பெரும்பலானோருக்கு பணி காலம் முடிவடைந்துவிட்டது.

2007ல் புதிய நியமனம் நடந்தது. அவர்களில் பெரும்பாலானோருக்கும் சர்வீஸ் காலம் முடிந்துவிட்டது.

இதன் காரணமாக தற்போது 5 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆட்சியில் 2016 -2021 வரையில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் என்று 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேரை பணி நியமனம் செய்தனர்.

ஆனால் இந்த ஆட்சியில் பணி நியமனம் என்பதே இல்லை.இப்போது தேர்தல் நெருங்குவதால் 3642 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.

திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தனர். ஆனால் இதுவரை 50 ஆயிரம் பேரை கூட நியமிக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. இதனால் அரசு பணியில் ஊழியர்களுக்கு பணி சுமை ஏற்பட்டுள்ளது. இரண்டு, மூன்று பேர் செய்யும் வேலையை ஒருவரே செய்யும் நிலையில் தான் அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. அரசு எப்போது இந்த காலியிடங்களை நிரப்பும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இன்னொரு பக்கம் இளைஞர்களும் அரசு தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116 ஆக உள்ளது என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். 5 lakh government posts

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share