கோடை விடுமுறை என்பது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான காலம். ஆனால் சில சமயங்கள் அது சோகத்தில் முடிந்துவிடுகிறது. 3 boys death due to drown in stream
அந்தவகையில் கடலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு பெற்றோர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே காட்டுமன்னார்கோயில் வடக்குகொளக்குடி ஜாகீர் உசேன் நகர் பகுதியில் உள்ள வெள்ளையங்கால் ஓடையில் மூன்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த முஜிபுல்லா என்பவரின் 8 வயது மகன் உபைத்துல்லா, ஜாபர் சாதிக்கின் 10 வயது மகன் முகமது அபில், பாஷா என்பவரின் 14 வயது மகன் முகமது பாசித் ஆகியோர் ஓடையில் குளித்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்த போது, தண்ணீரில் அடித்து சென்றுவிட்டனர்.
குழந்தைகளை காணவில்லை என்று பெற்றோர்கள் தேடிய நிலையில், இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், ஓடையில் கிடந்த மூன்று சிறுவர்களையும் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சேத்தியாதோப்பு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 boys death due to drown in stream