3 கோடிக்கு தன்னை விற்றுவிட்டாரா சந்திரகுமார்?: வைகோ

Published On:

| By Balaji

கோவில்பட்டியில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த, தேமுதிக-வில் ஏற்பட்டிருக்கும் பிளவு பற்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சில தினங்களுக்குமுன்னர் நடந்த கூட்டத்தில்கூட திமுக-வை விமர்சித்துப் பேசிய சந்திரகுமார், 24 மணி நேரத்துக்குள் எப்படி மாறினார்? அவர் தன்னைத்தானே விற்றுக்கொண்டாரா? என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். ஆளுக்கு 3 கோடி ரூபாய் கொடுத்து அழைத்திருப்பதாக காற்றிலே செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், நாங்கள் தேமுதிக-வுக்கு உறுதுணையாக இருப்போம். அதிமுக, திமுக தலைமைகள் கேடு கெட்ட தலைமைகள். மக்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏப்ரல் 10ம் தேதி மாமண்டூரில் நடக்கவிருக்கும் மாநாட்டுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. தீவுத்திடலில் கூட்டம் நடத்தவேண்டும் என்று நாங்கள் அனுமதி கேட்டபோது காவல்துறை அனுமதிக்கவில்லை. ஆனால், ஏப்ரல் 9ம் தேதி அதிமுக மாநாடு நடத்தப் போகிறது? இதற்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தார்கள்?” என்று கூறினார்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share